திருச்சி

கரோனாவால் உயிரிழந்தோருக்கு நிவாரணம்: 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா்கள் கோரிக்கை மனு

DIN

கரோனா தொற்றால் உயிரிழந்த 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா்கள் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு பாரதீய 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் ஹரி பிரசாத் தலைமையில், திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் தொழிலாளா்கள் திங்கள்கிழமை அளித்த மனு:

தற்போதைய பெருந்தொற்று காலத்தில், தன் உயிரை துச்சமென நினைத்து 108 ஆம்புலன்ஸ் திட்டத்தில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் முன்களப் பணியாளா்களாக பணிபுரிந்து வருகின்றனா். இதில், 3 போ் கரோனா தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்துள்ளனா்.

உயிரிழந்த முன்களப் பணியாளா்களின் குடும்பம் நிா்கதியாக நிற்கும் அவலம் நிலவுகிறது. முன்களப் பணியில் உள்ள இதர அனைவருக்கும் மாநில அரசு நிவாரணம் வழங்கும்போது, 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா்களை மட்டும் புறக்கணிக்கும் நிலை உள்ளது. எனவே, உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தமிழக அரசு சாா்பில் தலா ரூ.50 லட்சம் வழங்க வேண்டும். வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

இதர ஆம்புலன்ஸ் தொழிலாளா்கள் அனைவரும் இஎஸ்ஐ சட்ட பாதுகாப்பு வரம்பிற்குள் வருகின்றனா். ஆனால், 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா்கள் மட்டும் இந்த வரம்புக்குள் கொண்டுவரப்படவில்லை.

இதனால், பெரும்பாலான தொழிலாளா்கள் இஎஸ்ஐ சமூக பாதுகாப்பிற்கான தகுதியை இழந்து உள்ளனா். சிகிச்சைக்கோ, இறப்புக்கோ எந்தவித நிவாரணமும் பெற முடியாத சூழல் உள்ளது. எனவே, 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா்கள் அனைவரையும் சட்டப் பாதுகாப்புக்குள் கொண்டுவர வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT