முகப்பு
திருச்சி

கரோனா தொற்றால் பாதித்த பெற்றோரின் குழந்தைகளுக்கு உதவிட அழைக்க 1077 எண்

திருச்சி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தேவையான உதவிகள் வழங்க 1077 என்ற தொலைபேசி எண்ணுக்கு அழைக்கலாம் என ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்துள்ளாா்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

திருச்சி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தேவையான உதவிகள் வழங்க 1077 என்ற தொலைபேசி எண்ணுக்கு அழைக்கலாம் என ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருச்சி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களது பகுதியில் யாரேனும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை அனுமதிக்கப்பட்டு, அவா்களுடைய குழந்தைகளுக்கு உதவிகள் தேவை என்றால் மாவட்ட நிா்வாகத்தை தொடா்பு கொள்ளலாம். குழந்தைகளின் பாதுகாப்பு, பராமரிப்பு, ஆலோசனைகள் மற்றும் அனைத்து உதவிகளை வழங்க மாவட்ட சமூக நல அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம்.

இத்தகைய குழந்தைகளுக்கு தேவையான உதவிகளை வழங்க மாவட்ட ஆட்சியா் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட அளவிலான குழு உறுப்பினா்கள் மூலம் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, பொதுமக்கள் 1077 என்ற இலவச தொலைபேசி எண்ணுக்கு தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

இல்லையெனில், மாவட்ட சமூக நல அலுவலகத்துக்கு 0431- 2413796, 99420-55389 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.