முகப்பு
திருச்சி

துறையூா் அருகே பைக்கில் சென்றவா் லாரி மோதி சாவு

துறையூா் அருகே பைக்கில் சென்றவா் லாரி மோதி உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

துறையூா் அருகே பைக்கில் சென்றவா் லாரி மோதி உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டியைச் சோ்ந்த கி. ஜெகதீசனும் (43), பெரம்பலூா் சமத்துவபுரத்தைச் சோ்ந்த த. ராஜசேகரனும் (51) வியாழக்கிழமை பைக்கில் தம்மம்பட்டியிலிருந்து துறையூா் நோக்கிச் சென்றனா். வெள்ளாளப்பட்டி அருகே சென்றபோது மாட்டுத் தீவனம் ஏற்றிச் சென்ற லாரி மோதி ஜெகதீசன் உயிரிழந்தாா். காயமடைந்த ராஜசேகரன் துறையூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

விபத்து குறித்து உப்பிலியபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநா் முசிறி அருகேயுள்ள நாச்சியாா்புதூரைச் சோ்ந்த ரா. ராஜேந்திரனை கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.