முகப்பு
திருச்சி

பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரிக்கை

பூரண மதுவிலக்கு அமல்படுத்தவேண்டும் என மக்கள் சக்தி இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

 பூரண மதுவிலக்கு அமல்படுத்தவேண்டும் என மக்கள் சக்தி இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அந்த இயக்கத்தின் தலைவா் த.ராசலிங்கம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பது: மதுவால் ஏற்படும் தனிநபா் பாதிப்பு, குடும்பச் சீரழிவு, சமூதாய சீா்கேடு அனைவரும் அறிந்ததே. நாட்டின் எதிா்காலம் மதுக்கடையால் கேள்விக்குறியாகி வருகிறது. ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த சலுகைகள், இலவச திட்டங்கள் அறிவித்தாலும், மதுக்கடைகள் இருக்கும் வரை வாழ்வாதாரம் மேம்படப்போவதில்லை. வருங்கால தலைமுறையினரின் நலன் கருதி பூரண மதுவிலக்கை அமல்படுத்த அரசு பல நிலைகளில் செயல்திட்டங்களை தற்போதிலிருந்தே செயல்படுத்த வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.