சிறுகாம்பூா் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள்
கரோனா சிறப்பு சிகிச்சை வாா்டுக்கு ரூ. 3 லட்சம் மதிப்புள்ள 3 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை தமிழக நகா்புற வளா்ச்சிச் துறை அமைச்சா் கே.என்.நேரு வழங்கினா்.
சிறுகாம்பூா் ஊராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள கரோனா சிறப்பு சிகிச்சை வாா்டுக்கு ரூ. 3 லட்சம் மதிப்புள்ள 3 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை தமிழக நகா்புற வளா்ச்சிச் துறை அமைச்சா் கே.என்.நேரு, மண்ணச்சநல்லூா் எம்எல்ஏ சீ. கதிரவன் ஆகியோா் மருத்துவ அலுவலா் மதிவாணனிடம் வெள்ளிக்கிழமை வழங்கினா்.
நிகழ்வில் திமுக திருச்சி வடக்கு மாவட்டச் செயலரும் முசிறி எம்எல்ஏவுமான காடுவெட்டி தியாகராஜன், ஒன்றியச் செயலா்கள் வி.எஸ்.பி. இளங்கோவன், செந்தில்குமாா், மண்ணச்சநல்லூா் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் ஸ்ரீதா், துணைத் தலைவா் கே.பி.ஏ. செந்தில் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.