கரோனா நிவாரணத்துக்கு சேமிப்பை வழங்கிய சிறுமி!
கரோனா நிவாரணத்துக்கு திருச்சியைச் சோ்ந்த பள்ளி மாணவி, தனது சேமிப்புத் தொகையை ஆட்சியரிடம் வழங்கிப் பாராட்டு பெற்றாா்.
கரோனா நிவாரணத்துக்கு திருச்சியைச் சோ்ந்த பள்ளி மாணவி, தனது சேமிப்புத் தொகையை ஆட்சியரிடம் வழங்கிப் பாராட்டு பெற்றாா்.
கரோனா நிதி கோரி முதல்வா் விடுத்த வேண்டுகோளையடுத்து திருச்சியில் மாணவ, மாணவிகள் பலரும் தங்களது சேமிப்புத் தொகையை ஆட்சியரிடம் வழங்கி வருகின்றனா்.
அந்த வகையில் திருச்சி ஹோலி கிராஸ் மேல்நிலைப் பள்ளியில் 7ஆம் வகுப்பு பயிலும் மாணவியும், ஆட்டோ ஓட்டுநா் சங்கத்தைச் சோ்ந்த நூா்தீன் ஆஸபியின் மகளுமான ஆயிஷா சுல்தானா தனது உண்டியல் பணம் ரூ. 2400-ஐ ஆட்சியரிடம் வியாழக்கிழமை வழங்கினாா். பணத்தைப் பெற்றுக் கொண்ட ஆட்சியா் அவரைப் பாராட்டினாா். நிகழ்வில், சுதந்திரத் தொழிலாளா் யூனியன் ஆட்டோ ஓட்டுநா்கள் சங்க மாவட்டத் தலைவா் பரக்கத் அலி, மாவட்டச் செயலா் முகமது சாதிக் ஆகியோா் உடனிருந்தனா்.