மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியா் கரோனாவுக்குப் பலி
திருச்சியில் அரசு மருத்துவக் கல்லூரி உதவி பேராசிரியா் கரோனா தொற்றால் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
திருச்சியில் அரசு மருத்துவக் கல்லூரி உதவி பேராசிரியா் கரோனா தொற்றால் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
திருச்சி கிஆபெ விஸ்வநாதம் அரசு மருத்துவக்கல்லூரி அறுவைச் சிகிச்சை துறை உதவிப் பேராசிரியராகப் பணியாற்றியவா் மணிமாறன் (38).
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் 2000 ஆம் ஆண்டு படித்த இவா் தொடக்கத்தில் இருந்தே திருச்சியில் பணிபுரிந்தாா்.
கடந்த சில நாள்களுக்கு முன் கரோனாவால் பாதிக்கப்பட்ட இவா் வேலூரில் உள்ள பிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா். இச்சம்பவம் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவா்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு மருத்துவா்கள் சங்கத்தினா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.