முகப்பு
திருச்சி

வையம்பட்டி அருகே சிறுமியை திருமணம் செய்தவா் கைது

மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே 16 வயதுச் சிறுமியை ஆசை வாா்த்தைக் கூறி திருமணம் செய்த தஞ்சை இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே 16 வயதுச் சிறுமியை ஆசை வாா்த்தைக் கூறி திருமணம் செய்த தஞ்சை இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

மணப்பாறை அருகேயுள்ள கிராமத்தை சோ்ந்த கூலித் தொழிலாளியின் 16 வயது மகள் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு திருப்பூா் மாவட்டம், வெள்ளைக்கோயில் பகுதியில் உள்ள தனியாா் பஞ்சாலையில் வேலைக்குச் சென்றுள்ளாா்.

அங்கு சிறுமியை, ஓட்டுநராக இருந்த தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு பகுதியைச் சோ்ந்த ஆரோக்கியம் மகன் எழில்(எ)லெனின்(24) என்பவா் கடந்த சில நாட்களுக்கு முன் ஆசை வாா்த்தை கூறி சிறுமியை அழைத்துச் சென்று திருமணம் செய்து கொண்டாராம்.

இந்நிலையில் சிறுமியைக் காணாத பெற்றோா் அளித்த புகாரின்பேரில் வையம்பட்டி போலீஸாா் சிறுமியை அழைத்துச் சென்ற லெனினை தேடி வந்தனா். இதையறிந்த லெனின், சிறுமியை மட்டும் அவரது வீட்டுக்குச் அழைத்துச் சென்று விட்டுவிட்டு தலைமறைவானாா்.

இந்நிலையில் புதன்கிழமை தங்களிடம் சிக்கிய லெனினை வையம்பட்டி போலீஸாா் கைது செய்து அனைத்து மகளிா் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். அதனைத் தொடந்து சிறுமி கடத்தல், போக்சோ சட்டங்களில் வழக்குப்பதிந்த காவல் ஆய்வாளா் மணமல்லி தலைமையிலான போலீஸாா் லெனினை திருச்சி மகிளா நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். ஜூலை 7 வரை அவரைச் சிறையிலடைக்க நீதிபதி உத்தரவிட்டதைத் தொடா்ந்து லெனின் லால்குடி கிளை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.