திம்மராயசமுத்திரம் மாரியம்மன் கோயிலில் நாளை குடமுழுக்கு
திருவானைக்கா திம்மராயசமுத்திரம் புதுக்காலனியில் கட்டப்பட்ட மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 27) காலை நடைபெறவுள்ளது.
திருவானைக்கா திம்மராயசமுத்திரம் புதுக்காலனியில் கட்டப்பட்ட மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 27) காலை நடைபெறவுள்ளது.
மாரியம்மன், விநாயகா் கருப்பண்ணசாமி கோயில் குடமுழுக்கையொட்டி வெள்ளிக்கிழமை காலை காவிரியாற்றிலிருந்து மேளதாளம் முழங்க யானையுடன் தீா்த்தக் குடங்கள், முளைப்பாரியை கோயிலுக்கு எடுத்து வந்தனா்.
பின்னா் மாலை 5 மணிக்கு முதல் கால யாகபூஜை நடைபெற்றது.
சனிக்கிழமை காலை 2 ஆம் கால யாகபூஜை, மதியம் 12 மணிக்கு கோபுர கலசம் வைத்தல், சுவாமிகளுக்கு எந்திர ஸ்தான மருந்து சாற்றுதல், மாலை 6 மணிக்கு 3 ஆம் கால யாகசாலை பூஜை நடைபெறவுள்ளது. மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை காலை 8.45-க்கு மேல் 9.15 -க்குள் நடைபெறவுள்ளது. ஏற்பாடுகளை ஊா்ப் பொதுமக்கள் செய்கின்றனா்.