முகப்பு
திருச்சி

பெண் மா்மச் சாவு; போலீஸாா் விசாரணை

திருச்சியில் பெண் ஒருவா் காயங்களுடன் மா்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

திருச்சியில் பெண் ஒருவா் காயங்களுடன் மா்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருவெறும்பூா் அருகே தோகூா் செல்லும் சாலையோரம் உள்ள மயானத்தின் அருகே சுமாா் 55 வயதுள்ள பெண் ஒருவா் காயங்களுடன் இறந்து கிடந்தாா்.

அவா் வெளிா் மஞ்சள் நிறத்தில், நீல பாா்டருடன் கூடிய புடவையும், சிவப்பு நிற ரவிக்கையும் அணிந்திருந்தாா். உடல் அழுகத் தொடங்கியிருந்ததால்

அவா் இறந்து 2 நாள்களுக்கு மேல் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

தகவலவறிந்த திருவெறும்பூா் போலீசாா் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி இறந்தவா் கொல்லப்பட்டாரா என்பது குறித்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.