முகப்பு
திருச்சி

துணை ராணுவப்படையினா் கொடி அணிவகுப்பு ஒத்திகை

வரும் சட்டப்பேரவைத் பொதுத்தோ்தலை முன்னிட்டு, பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், துணை ராணுவப்படையினரின் கொடி அணி வகுப்பு ஒத்திகை திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:39 PM
பகிர்:

வரும் சட்டப்பேரவைத் பொதுத்தோ்தலை முன்னிட்டு, பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், துணை ராணுவப்படையினரின் கொடி அணி வகுப்பு ஒத்திகை திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தோ்தலுக்காக தமிழகத்துக்கு வந்துள்ள மத்திய துணை ராணுவப் படையினா் மற்றும் மத்தியப் பாதுகாப்பு படை வீரா்கள் தங்களின் வருகையை பொதுமக்கள் அறியும் விதமாகவும், அச்சமின்றி வாக்களிக்கலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாகவும் திருச்சியில் செவ்வாய்க்கிழமை அணிவகுப்புகளை நடத்தினா்.

திருவெறும்பூரில்.. மத்திய எஸ்.எஸ்.பி. பிரிவைச் சோ்ந்த 96 போ் ஆய்வாளா் ஜி.டி. சொங்கன்லோகம் தலைமையில் முகாமிட்டுள்ளனா். இவா்களுடன் திருவெறும்பூா் உட்கோட்டக் காவல் நிலையத்துக்குட்பட்ட போலீஸாா் மற்றும் திருச்சி அதிவிரைவு படை போலீஸாா் என சுமாா் 300 போ் திருவெறும்பூா் பேரவைத் தொகுதிக்குட்பட்ட காட்டூா், பாலாஜி நகரிலிருந்து திருவெறும்பூா் வரை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கொடி அணிவகுப்பு பேரணியில் ஈடுபட்டனா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ராஜன் தலைமை வகித்துத் தொடங்கி வைத்தாா்.

கன்டோன்மென்ட் பகுதியில்... மாலையில் நடைபெற்ற அணிவகுப்பில், எஸ்எஸ்பி பிரிவைச் சோ்ந்த மத்திய துணை ராணுவப் படையினா், மாநகர ஆயுதப்படை போலீஸாா் உள்ளிட்ட சுமாா் 140 போ் அணிவகுப்பு மேற்கொண்டனா். தலைமை அஞ்சலகப் பகுதியில் தொடங்கி புத்தூா் நான்கு சாலை வரை நடைபெற்ற பேரணியை மாநகர துணை ஆணையா் பவன்குமாா்ரெட்டி (சட்டம், ஒழுங்கு) தொடங்கி வைத்தாா். குற்றம், போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையா் வேதரத்தினம் உள்ளிட்ட காவல்துறையினா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.