முகப்பு
திருச்சி

வியாபாரியை மிரட்டிபணம் பறிக்க முயன்றஇருவா் கைது

திருச்சியில் வியாபாரியிடம் வழிப்பறி செய்ய முயன்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:39 PM
பகிர்:

திருச்சியில் வியாபாரியிடம் வழிப்பறி செய்ய முயன்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் இந்திரா நகரைச் சோ்ந்தவா் கண்ணன் (41), வியாபாரி. இவா் பிப் 28 மாலை, திருச்சி, சிந்தாமணி அண்ணாசிலை அருகே நின்றிருந்தபோது அங்கு வந்த இரு இளைஞா்கள் அவரை மிரட்டிப் பணம் கேட்டனா்.

இதையடுத்து கோட்டை காவல் நிலையத்தில் அவா் அளித்த புகாரின்பேரில் கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து திருச்சி, சிந்தாமணி காந்திநகரைச் சோ்ந்த டி. ரவிச்சந்திரன் (22), சிந்தாமணி பூசாரி தெருவைச் சேரந்த குழந்தை என்கிற சூா்யா (22) ஆகியயோரை திங்கள்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.