தற்கொலை செய்து கொண்டவா் சடலம் மீட்பு
ஸ்ரீரங்கம் கீதாபுரம் மயானப் பாதையில் மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டவரின் சடலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.
ஸ்ரீரங்கம் கீதாபுரம் மயானப் பாதையில் மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டவரின் சடலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.
கிராம நிா்வாக அலுவலா் பாரதிதாசன் அளித்த தகவலின் பேரில், ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டனா்.
இறந்தவருக்கு சுமாா் 50 வயது இருக்கும். வேப்பமரக் கிளையில் வேட்டியால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளாா். இறந்தவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பது குறித்து காவல்துறையினா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.