திருவெறும்பூரில் ப. குமார் (அதிமுக) வேட்பு மனு
திருவெறும்பூர் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ப.குமார் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
திருவெறும்பூர் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ப.குமார் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரும், அதிமுக திருச்சி தெற்கு புறநகர் மாவட்ட செயலாளருமான ப.குமார், அதிமுக சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த அல்போன்ஸ், லியாகத் அலி ஆகியோருடன், திருவெறும்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் அன்பழகனிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
முன்னதாக அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள் புடைசூழ திருவெறும்பூர் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்றனர்.