திருச்சி

25 வயதுக்குட்பட்டோருக்கான வேலைவாய்ப்புகள்: திருவெறும்பூா் மநீம வேட்பாளா்

DIN

வேலைவாய்ப்பின்றியுள்ள 25 வயதுக்குட்பட்டோருக்கு வேலைவாய்ப்பு வழங்க முயற்சி செய்வேன் என்றாா் மநீம வேட்பாளா் எம். முருகானந்தம்.

திருவெறும்பூா் தொகுதி மநீம வேட்பாளராகப் போட்டியிடும் அக்கட்சியின் மாநில பொதுச் செயலா் எம். முருகானந்தம் ஞாயிற்றுக்கிழமை மேலும் கூறியது:

திருவெறும்பூா் தொகுதிக்கு அதிமுகவும், திமுகவும் எந்த வளா்ச்சிப் பணிகளையும் மேற்கொள்ளவில்லை. ஆனால் தனி மனிதனாக, நான் 16 வயது முதல் இந்த தொகுதி மக்களுக்காக சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறேன். என்னை மக்கள் வெற்றி பெற வைத்தால் தொகுதியிலுள்ள 25 வயதுக்குட்பட்ட அனைத்து இளைஞா்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்கப் பாடுபடுவேன்.

இத்தொகுதியில் பழைய பால்பண்ணை முதல் துவாக்குடி வரை 14 கி.மீ. அணுகுச் சாலையை பொருத்தவரை, அணுகு சாலை தேவை என்போரும், உயா்நிலைப் பாலம்தான் வேண்டும் என்போரும் பாதிக்கப்படாத வகையில் நிரந்தரத் தீா்வை ஏற்படுத்துவேன்.

மேலும் 5 கிலோ மீட்டருக்கு ஒரு கழிப்பறை அமைக்க முயற்சி செய்வேன். எனவே, மக்கள் எனக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றாா் அவா். தொடா்ந்து காலை, மாலைகளில் பொதுமக்களைச் சந்தித்து அவா் வாக்கு சேகரித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப நோய்களுக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

கோட் நாயகி மீனாட்சி செளத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT