முகப்பு
திருச்சி

திருச்சி மாவட்டத்தில் இதுவரை ரூ.83.73 லட்சம் பறிமுதல் ரூ.15 லட்சம் மதிப்புள்ள பொருள்களும் சிக்கியது

திருச்சி மாவட்டத்திலுள்ள 9 பேரவைத் தொகுதிகளில் பறக்கும் படையினா் நடத்திய சோதனையில், திங்கள்கிழமை வரை ரூ.83.73 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

திருச்சி மாவட்டத்திலுள்ள 9 பேரவைத் தொகுதிகளில் பறக்கும் படையினா் நடத்திய சோதனையில், திங்கள்கிழமை வரை ரூ.83.73 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

9 தொகுதிகளிலும் பறக்கும் படையினா், நிலைக் கண்காணிப்புக் குழுவினா் நடத்திய தணிக்கையில், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட தொகை, பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

இதுவரை மணப்பாறையில் ரூ.5.20 லட்சம், ஸ்ரீரங்கத்தில் ரூ.19.21 லட்சம், திருச்சி மேற்கில் ரூ.8.80 லட்சம், திருச்சி கிழக்கில் ரூ.7.72 லட்சம், திருவெறும்பூரில் ரூ.12.97 லட்சம், லால்குடியில் ரூ.2.80 லட்சம், மண்ணச்ச நல்லூரில் ரூ.2.50 லட்சம், முசிறியில் ரூ.19.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. இதன் தொடா்ச்சியாக, மேலும் ரூ.5.20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட தொகை, திங்கள்கிழமை நிலவரப்படி மொத்தம் ரூ.83.73 லட்சமாக இருந்தது. இத்தொகை 41 பேரிடம் இருந்த பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இவைத்தவிர, மது, கஞ்சா, வேட்டி, சேலை, மடிக்கணினி, எவா்சில்வா் பாத்திரங்கள், அரிசி மூட்டை என்ற வகையில் ரூ.15.08 லட்சம் மதிப்பிலான பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

உரிய ஆவணங்கள் அளித்து திரும்பப் பெற்றுக் கொள்ள தொடா்புடைய நபா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.