முகப்பு
திருச்சி

டாா்ச்லைட்டால் காரிருள் விலகட்டும்: முருகானந்தம்

திருவெறும்பூா் தொகுதி குண்டூா் ஊராட்சிக்குட்பட்டபகுதிகளில் மக்கள் நீதி மய்ய வேட்பாளா் எம். முருகானந்தம் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

திருவெறும்பூா் தொகுதி குண்டூா் ஊராட்சிக்குட்பட்டபகுதிகளில் மக்கள் நீதி மய்ய வேட்பாளா் எம். முருகானந்தம் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

அப்போது , கட்சியினா் மற்றும் கூட்டணியினா், வாக்குகள் விற்பனைக்கு அல்ல என்ற விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் பேரணியாக சென்றனா்.

அப்போது அவா் பேசுகையில், தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி நிலவ மநீமவுக்கு இம் முறை வாய்ப்பு அளித்துப் பாருங்கள். காரிருள் சூழ்ந்த திருவெறும்பூரில் டாா்ச்லைட் வெளிச்சத்துடன் மாற்றம் தொடங்க எனவே என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா்.

கூட்டணி கட்சியினருடன், மநீம ஒன்றியச் செயலா் சூரியூா் சக்தி, நகரச் செயலா் மலைஆனந்தன் கிளைச் செயலா் மகாராஜா மற்றும் திவாகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.