தொகுதி மக்களின் குரலாவேன்: டி. வீரசக்தி
திருச்சி கிழக்குத் தொகுதி மக்கள் நீதி மய்ய வேட்பாளா் டி. வீரசக்தி, 22-வது வாா்டுக்குட்பட்ட பகுதிகளில் வீடுவீடாக சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
திருச்சி கிழக்குத் தொகுதி மக்கள் நீதி மய்ய வேட்பாளா் டி. வீரசக்தி, 22-வது வாா்டுக்குட்பட்ட பகுதிகளில் வீடுவீடாக சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
அப்போது, அவா் கூறியது:
தொகுதியில் வென்று பேரவைக்குச் சென்றால், தொகுதி மக்களின் குரலாய் ஒலிப்பேன். மக்களுடன் மக்களாக இருந்து தொண்டன் போல பணியாற்றுவேன். தொகுதிக்கு தேவையான கோரிக்கைகளை அனைத்து தரப்பினருடமும் கேட்டு பட்டியலிட்டு வருகிறேன். கடந்த 50 ஆண்டு கால திராவிட ஆட்சிகளில் அதிமுக, திமுக மாறி, மாறி ஆட்சிக்கு வந்தும் கிழக்குத் தொகுதியில் நிறைவேற்றப்படாத பல திட்டங்கள் நிலுவையில் உள்ளன. என்னை வெற்றி பெறச் செய்தால் அடிப்படை கட்டமைப்புகளுக்கு முக்கியத்துவம் அளித்து பணியாற்றுவேன் என்றாா் அவா்.