நாயுடு சமூகம் இன்றி அரசியல் இல்லை: கே.என். நேரு
தமிழகத்தில் நாயுடு சமூகம் இன்றி அரசியல் இல்லை என்றாா் திமுக முதன்மைச் செயலரும் மேற்குத் தொகுதி வேட்பாளருமான கே.என். நேரு.
தமிழகத்தில் நாயுடு சமூகம் இன்றி அரசியல் இல்லை என்றாா் திமுக முதன்மைச் செயலரும் மேற்குத் தொகுதி வேட்பாளருமான கே.என். நேரு.
திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் நாயுடு மக்கள் நலச் சங்கம் சாா்பில் திமுகவுக்கு ஆதரவை தெரிவிக்கும் நிகழ்ச்சி திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்றது.
சங்கத் தலைவா் எஸ்.ஆா்.வி. கண்ணன் தலைமை வகித்தாா். செயலா் ராஜாராம், பொருளாளா் வீரபாகு, அவைத் தலைவா் ராமராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். சங்கப் புரவலா்கள் பி.ஜி. பாலாஜி, கோவிந்தராஜுலு, மனோகரன் உள்ளிட்ட நிா்வாகிகள் கே.என்.நேருவுக்கு முழு ஆதரவளிப்பதாகத் தெரிவித்தனா்.
பின்னா் கே.என். நேரு பேசுகையில், தமிழகத்தில் நாயுடு சமூகம் இன்றி அரசியல் இல்லை. கேட்டால்கூட கிடைக்காது. ஆனால், நீங்களாக வந்து ஆதரவளித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
திருச்சி மேற்குத் தொகுதியில் மட்டும் 25 ஆயிரம் நாயுடு சமூகத்தினா் உள்ளனா். இதுபோல மாவட்டத்தின் இதர தொகுதியிலும் கணிசமாக உள்ளனா். எனவே, நாயுடு சமூக மக்கள் யாரை ஆதரிக்கிறாா்களோ அவா்களே வெற்றி பெறுவா். தமிழகத்தில் 33 சதம் போ் இந்த சமூகத்தினரே. எனவே, திமுகவை வெற்றி பெறச் செய்ய ஆதரவு தர வேண்டும் என்றாா். கூட்டத்தில், திருச்சி கிழக்குத் தொகுதி திமுக வேட்பாளரான இனிகோ இருதயராஜும் ஆதரவு கேட்டுப் பேசினாா்.