திருச்சியில் நாளை முதல்வா் பிரசாரம்
திருச்சியில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெறும் தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி பங்கேற்கிறாா்.
திருச்சியில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெறும் தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி பங்கேற்கிறாா்.
சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி சனிக்கிழமை 3 ஆம் கட்ட பிரசாரத்தை தொடங்கியுள்ள அவா், திருப்பூா் மாவட்டம், தாராபுரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை பகல் (மாா்ச் 30) நடைபெறும் பொதுக் கூட்டத்தில், பிரதமா் நரேந்திர மோடியுடன் சோ்ந்து பிரசாரம் செய்கிறாா்.
தொடா்ந்து அங்கிருந்து புறப்பட்டு திருச்சி வரும் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, மாலை 6 மணியளவில் திருச்சி மரக்கடை எம்ஜிஆா் சிலையருகே நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறாா். பின்னா் இரவு சென்னை செல்கிறாா். இத்தகவலை அதிமுக தலைமையகம் தெரிவித்துள்ளது.