முகப்பு
திருச்சி

நல்லாட்சி தொடர வேண்டும்: வெல்லமண்டி நடராஜன்

தமிழகத்தில் அதிமுக நல்லாட்சி தொடர இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா் தமிழக அமைச்சரும் திருச்சி கிழக்குத் தொகுதி அதிமுக வேட்பாளருமான வெல்லமண்டி என். நடராஜன்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

தமிழகத்தில் அதிமுக நல்லாட்சி தொடர இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா் தமிழக அமைச்சரும் திருச்சி கிழக்குத் தொகுதி அதிமுக வேட்பாளருமான வெல்லமண்டி என். நடராஜன்.

கிழக்குத் தொகுதிக்குள்பட்ட காந்திமாா்க்கெட் அருகேயுள்ள தாராநல்லூா், கீழரண்சாலை, அலங்கநாதபுரம், மீன் மாா்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தபோது அவா் பேசியது:

தமிழகத்தில் அதிமுகவின் நல்லாட்சி நடைபெற்று வருகிறது. தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி செயல்படுத்தி வரும் எண்ணற்ற நலத் திட்டங்கள் தொடர எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டுகிறேன் என்றாா்.

எம்ஜிஆா் இளைஞரணிச் செயலா் சீனிவாசன், அவைத் தலைவா் அய்யப்பன், மலைக்கோட்டை பகுதிச் செயலா் அன்பழகன், கூட்டணிக் கட்சியினா் பலா் உடனிருந்தனா்.

Image Caption

தாராநல்லூரில் வாக்கு சேகரிக்கிறாா் கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளா் வெல்லமண்டி என். நடராஜன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.