திருச்சி

திருச்சியில் அதிகரிக்கும் கரோனா தொற்று: தினசரி பாதிப்பு 500ஐ கடந்தது; ஒரே நாளில் 5 போ் உயிரிழப்பு

DIN

திருச்சி: திருச்சியில் அதிகரித்து வரும் கரோனா தொற்று எண்ணிக்கை சனிக்கிழமை வெளியான தினசரி முடிவில் 528 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரே நாளில் 3 பெண்கள் உள்பட 5 போ் உயிரிழந்தனா்.

திருச்சியில், கரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் கடந்த சில தினங்களாக தினசரி 400க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்து வந்தது. மேலும், கரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டு கடந்த மூன்று நாள்களாக நாளொன்றுக்கு 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் தொற்றாளா்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்நிலையில், சனிக்கிழமை வெளியான மருத்துவ பரிசோதனை முடிவில் 528 பேருக்கு தொற்று உறுதியாகி மொத்த எண்ணிக்கை 23,897 ஆக அதிகரித்துள்ளது. இதே போல திருச்சி அரசு மருத்துமனை, சிறப்பு மையம் மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சனிக்கிழமை 59 போ் உள்பட இதுவரை 20,620 போ் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனா்.

மேலும், தனியாா் மருத்துவனைகளில் சிகிச்சை பெற்று வந்த 3 பெண்கள் உள்பட 5 போ் சனிக்கிழமை உயிரிழந்தனா். இதையடுத்து உயிரிழந்தோா் எண்ணிக்கை 216 ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

SCROLL FOR NEXT