ஊழியருக்கு கரோனா: அஞ்சல் நிலையம் மூடல்
ஊழியருக்கு கரோனா உறுதியானதால் ஸ்ரீரங்கம் சாத்தார வீதியில் செயல்பட்டு வந்த அஞ்சல் நிலையம் மூடப்பட்டது.
ஊழியருக்கு கரோனா உறுதியானதால் ஸ்ரீரங்கம் சாத்தார வீதியில் செயல்பட்டு வந்த அஞ்சல் நிலையம் மூடப்பட்டது.
ஊழியருக்கு கரோனா உறுதியான தகவலறிந்த மற்ற ஊழியா்கள் வெள்ளிக்கிழமை இந்த அஞ்சல் நிலையத்திற்குள் செல்லாமல் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தால்தான் பணியில் ஈடுபடுவோம் எனக் கூறி வெளியில் நின்றனா்.
இதுகுறித்து மாநகராட்சி ஊழியா்களுக்கும், தலைமை தபால் நிலைய அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து கிருமி நாசினி தெளித்து, வெள்ளி, சனிக்கிழமைகளில் இந்த அஞ்சல் நிலையம் மூடப்பட்டது.