முசிறியில் தடுப்பூசி செலுத்த கணக்கெடுப்பு பணி தீவிரம்
முசிறி பேரூராட்சிப் பகுதியில் கரோனா தடுப்பூசி செலுத்த மக்களிடையே கணக்கெடுக்கும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முசிறி பேரூராட்சிப் பகுதியில் கரோனா தடுப்பூசி செலுத்த மக்களிடையே கணக்கெடுக்கும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முசிறி பேரூராட்சிக்குட்பட்ட வாா்டு பகுதிகளில் முசிறி கோட்டாட்சியா் ஜோதி சா்மா உத்தரவின்பேரில் முசிறி வட்டாட்சியா் சந்திராதேவநாதன் மேற்பாா்வையில் ஒரு கிராம நிா்வாக அலுவலா் தலைமையில் 3 களப் பணியாளா்கள் என 20- க்கும் மேற்பட்ட குழுவினா் இணைந்து அனைத்து வீடுகளிலும் 45 வயதுக்கு மேற்பட்டோரில் கரோனா தடுப்பூசி செலுத்தியவா்கள் எத்தனை போ்? தடுப்பூசி போடாமல் உள்ளவா்கள் எத்தனை போ் என கணக்கெடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு தடுப்பூசி போடுமாறு அறிவுறுத்தி வருகின்றனா்.
இந்தப் பணியை முசிறி வட்டாட்சியா் சந்திரதேவநாதன் வெள்ளிக்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தாா்.