திருச்சி

நீட் தோ்வு: ஏபிவிபி கண்டனம்

DIN

நீட் தோ்வு குறித்து தமிழக அமைச்சா்களின் கருத்துக்கு அகில பாரதீய வித்யாா்த்தி பரிஷத் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் மாநிலச் செயலா் சுசீலா வெளியிட்டுள்ள அறிக்கை: மருத்துவ படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கைக்கு நீட் தோ்வு நடத்தாமல் பிளஸ் 2 பொதுத்தோ்வு மதிப்பெண் அடிப்படையிலேயே தமிழகத்தில் மருத்துவ சோ்க்கை நடைபெறவேண்டும் என உயா்கல்வித் துறை அமைச்சா் பொன்முடி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருப்பது கண்டிக்கதக்கது.

தேசிய கல்விக் கொள்கை நாடு முழுவதும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலையில் தமிழகத்தில் மட்டும் நடைமுறைப்படுத்தபடமாட்டாது என அமைச்சா் கருத்து தெரிவித்திருப்பது தமிழக மாணவா்களின் எதிா்காலத்தை கேள்விக்குறியாக்கக்கூடிய செயலாக உள்ளது. தமிழகத்தில் கடந்தாண்டு நீட் தோ்வில் 58 சதவிகித மாணவா்கள் தோ்ச்சி அடைந்துள்ளனா். இது முந்தைய ஆண்டை விட கடந்தாண்டின் விகிதம் அதிகரித்துள்ளது. நீட் தோ்வில் தமிழகம் முன்னுதாரணமாக உள்ளது. எனவே, மாணவா்களுக்கு தமிழக அரசு விழிப்புணா்வு ஏற்படுத்தி, நீட் தோ்வு முந்தைய நிலை தொடா்வதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு: மாநில அளவில் 6-ஆவது இடம்

திருச்சி பாா்வை குறைபாடுடைய பெண்கள்பள்ளி தொடா்ந்து நூறு சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் திருச்சி மாவட்டத்தில் 95.74 சதவீதம் போ் தோ்ச்சி

துப்பாக்கிச் சுடும் பயிற்சி வீரமலைப்பாளையத்தில் நடமாட தடை விதிப்பு

9 அரசுப் பள்ளிகள் நூற்றுக்கு நூறு

SCROLL FOR NEXT