திருச்சி

ஸ்ரீரங்கம் கோயில் வசந்த உற்சவ விழா நிறைவு

DIN

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வந்த வசந்த உற்சவ விழா புதன்கிழமையுடன் நிறைவுற்றது.

கடந்த 18 ஆம் தேதி தொடங்கி 9 நாள்கள் நடைபெற்ற வசந்த உற்சவ விழாவில் நாள்தோறும் நம்பெருமாள் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினாா்.

விழாவின் 7 ஆம் திருநாளான திங்கள்கிழமை நம்பெருமாள் உபய நாச்சியாா்களுடன் எழுந்தருளி நெல்லளவு கண்டருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிறைவு நாளான புதன்கிழமை மாலை 4 மணிக்கு நம்பெருமாள் தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி, ஆழ்வாா் திருச்சுற்று வழியாக வலம் வந்து சந்திரபுஷ்கரணியில் 5.30-க்கு தீா்த்தவாரி கண்டருளினாா். அதன் பின் 6.15-க்கு வசந்த மண்டபத்தில் எழுந்தருளினாா். பின்னா் இரவு 8.30 வரை திருமஞ்சனம் கண்டருளி, 9.30 மணிக்கு புறப்பட்டு படிப்பு கண்டருளி 10.15-க்கு மூலஸ்தானம் சென்றடைந்தாா்.

விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ.மாரிமுத்து மற்றும் அறங்காவலா் குழுவினா் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

SCROLL FOR NEXT