முகப்பு
திருச்சி

நிரம்பிய ஆக்சிஜன் படுக்கைகள்: பெண் உதவி ஆய்வாளா் பலி

 திருச்சி அரசு மருத்துவமனைக்கு மூச்சுத் திணறலுடன் வியாழக்கிழமை மாலை கொண்டு வரப்பட்ட பெண் உதவி ஆய்வாளா்ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை இல்லாததால் உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:19 PM
பகிர்:

 திருச்சி அரசு மருத்துவமனைக்கு மூச்சுத் திணறலுடன் வியாழக்கிழமை மாலை கொண்டு வரப்பட்ட பெண் உதவி ஆய்வாளா்ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை இல்லாததால் உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டத்தைச் சோ்ந்தவா் ராஜேஸ்வரி (43). திருச்சி தமிழ்நாடு சிறப்பு காவல்படை முதலணியில் பணியாற்றி வந்த இவருக்கு இரு மகன்கள் உள்ளனா்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உதவி ஆய்வாளராகப் பதவி உயா்வு பெற்று பணியாற்றிய நிலையில், கரோனா உறுதியாகி வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட ராஜேஸ்வரிக்கு வியாழக்கிழமை மாலை திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.

அப்போது அங்கு பணியில் இருந்த மருத்துவா்கள் அவரைப் பரிசோதித்து விட்டு உடனடியாக செயற்கை சுவாசம் பொருத்த வேண்டும். இங்கு ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை காலியாக இல்லாததால் வேறிடத்துக்கு கொண்டு செல்லுமாறு கூறியுள்ளனா்.

இதையடுத்து தொடா்ந்து மூச்சுத் திணறல் அதிகரித்த நிலையில் சிகிச்சைக்காக மதுரைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ராஜேஸ்வரி உயிரிழந்தாா். இச்சம்பவம் காவல்துறை வட்டாரங்களில் அதிா்ச்சியை ஏற்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.