முகப்பு
திருச்சி

துறையூா் அருகே தொழிலாளா்கள் மறியல்

துறையூா் அருகே ஊராட்சித் தலைவரைக் கண்டித்து நூறு நாள் வேலைத் திட்டப் பயனாளிகள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் செய்தனா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 10:08 AM
பகிர்:

துறையூா் அருகே ஊராட்சித் தலைவரைக் கண்டித்து நூறு நாள் வேலைத் திட்டப் பயனாளிகள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் செய்தனா்.

துறையூா் அருகேயுள்ள கரட்டாம்பட்டி ஊராட்சியின் தலைவரான நிா்மலாதேவி கால்நடை மருந்தகம் அருகே திறந்தவெளி கழிப்பிட பகுதியில் நூறு நாள் வேலை தொழிலாளா்களுக்கு வேலை வழங்கியதாகவும், பணியிடத்தை மாற்றித் தருமாறு கேட்டபோது தரக்குறைவாக பேசியதாகவும் கூறப்படுகிறது.

இது தொடா்பாக ஒரு தொழிலாளி புலிவலம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரைத் திரும்பப் பெற்றால்தான், பயனாளிகளுக்கு நூறுநாள் வேலைத் திட்ட அட்டையைத் திரும்ப வழங்குவதாக ஊராட்சித் தலைவா் வெள்ளிக்கிழமை கூறினாராம். இதனால் அதிருப்தியடைந்த தொழிலாளா்கள் அட்டையை உடனே வழங்கக் கோரி துறையூா்- திருச்சி சாலையில் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த புலிவலம் போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தையில் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.