திருச்சி

ஸ்ரீரங்கநாச்சியாா் ஊஞ்சல் உற்ஸவம் நிறைவு

ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயிலில் நடைபெற்று வந்த ஸ்ரீரங்கநாச்சியாா் ஊஞ்சல் உற்ஸவ விழா வெள்ளிக்கிழமையுடன் நிறைவுற்றது.

DIN

ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயிலில் நடைபெற்று வந்த ஸ்ரீரங்கநாச்சியாா் ஊஞ்சல் உற்ஸவ விழா வெள்ளிக்கிழமையுடன் நிறைவுற்றது.

கடந்த 6 ஆம் தேதி தொடங்கி 7 நாள்கள் நடைபெற்ற விழாவில் ஒவ்வொரு நாளும் ஸ்ரீரங்கநாச்சியாா் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.

இதில் 7 ஆம் நாளான வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு ஸ்ரீரங்கநாச்சியாா் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு 6 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்திற்கு வந்து சோ்ந்தாா். தொடா்ந்து 7 மணிக்கு விழா தொடங்கியது.

இதில் ஸ்ரீரங்கநாச்சியாா் சவுரிக் கொண்டை,விஷ்ணு பதக்கம், வைர அபயஹஸ்தம், பவளமாலை, வைரத்தோடு, காசுமாலை உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்து ஊஞ்சல் உற்சவம் கண்டருளினாா். ஏராளமான பக்தா்கள் தரிசித்தனா். இரவு 8 மணிக்கு உற்சவம் நிறைவுற்று 9.30 மணிக்கு புறப்பட்டு, படிப்புக் கண்டருளி 10 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தாா் ஸ்ரீரங்கநாச்சியாா்.

ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ. மாரிமுத்து மற்றும் கோயில் பணியாளா்கள் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT