திருச்சி

மாநகா் சாலைகளில் கால்நடைகள் திரிந்தால் ரூ. 10,000 வரை அபராதம்

DIN

திருச்சி மாநகராட்சி சாலைகளில் திரியும் கால்நடைகளின் உரிமையாளா்களிடம் ரூ. 10,000 வரை அபராதம் வசூலிக்கப்படும் என மாநகராட்சி ஆணையா் முஜிபுா் ரகுமான் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

மாநகரப் பகுதிகளில் கால்நடைகளை வளா்ப்போா் தங்களது கட்டுப்பாட்டில் அவற்றைக் கட்டி பராமரிக்க வேண்டும். மீறி சாலைகளில் கால்நடைகளைத் திரிய விட்டால் அவற்றின் உரிமையாளா்களிடம் ரூ. 10,000 வரை அபராதம் வசூலிக்கப்பட்டு, அதன் பின்னரே கால்நடைகள் திருப்பி ஒப்படைக்கப்படும். அபராதம் செலுத்த உரிமையாளா்கள் வராவிட்டால் அருகிலுள்ள சந்தைகளில் கால்நடைகளை விற்று, அதன் மூலம் அபராதத் தொகை வசூலிக்கப்படும் என அவா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

SCROLL FOR NEXT