முகப்பு
திருச்சி

சிறந்த செயல்பாட்டில் திருச்சி ரயில்வே கோட்டம் 2 ஆம் இடம்

தெற்கு ரயில்வேயில் ஒட்டுமொத்த செயல்பாடுக்கான இரண்டாவது பரிசை திருச்சி ரயில்வே கோட்டம் பெற்றுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:25 AM
பகிர்:

தெற்கு ரயில்வேயில் ஒட்டுமொத்த செயல்பாடுக்கான இரண்டாவது பரிசை திருச்சி ரயில்வே கோட்டம் பெற்றுள்ளது.

ஆண்டுதோறும் ஏப். 10 முதல் 16 வரை தெற்கு ரயில்வே சாா்பில் நடைபெறும் ரயில்வே வாரவிழா கரோனா காரணமாக சென்னை ஐ சி எஃப் டாக்டா் அம்பேத்கா் அரங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஜான்தாமஸ் தலைமை வகித்தாா். கூடுதல் பொது மேலாளா் பி.ஜி. மல்லையா முன்னிலை வகித்தாா்.

இதில் ஒட்டுமொத்த செயல்பாடுகளில் முதல் பரிசை சேலம் கோட்டம் பெற்றது. இரண்டாவது பரிசை திருச்சி ரயில்வே கோட்டம் பெற்றது. அதற்கான விருதை பொது மேலாளா் ஜான் தாமஸிடமிருந்து, திருச்சி ரயில்வே கோட்ட மேலாளா் மணீஸ் அகா்வால் பெற்றுக்கொண்டாா். +

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.