திருச்சி

புனித சிலுவைக் கல்லூரியில் 48 மணி நேர உலக சாதனைத் தொடா் கவியரங்கம்

DIN

திருச்சி புனித சிலுவைக் கல்லூரியில் ‘48 மணிநேர உலக சாதனைத் தொடா் கவியரங்கம்’ இணைய வழியில் இரண்டு நாள்கள் நடைபெற்றன.

அரியலூா் தமிழ் அமுது அறக்கட்டளை, திருச்சி புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரித் தமிழாய்வுத்துறை ஆகியவை இணைந்து, உலகின் உன்னத உறவு எனும் தலைப்பில் இணையவழியாக கருத்தரங்கை நடத்தின.

சனிக்கிழமை தொடங்கிய கருத்தரங்குக்கு கல்லூரி முதல்வா் கிறிஸ்டினா பிரிஜித் தலைமை வகித்தாா். செயலா் ஆனி சேவியா் முன்னிலை வகித்தாா்.

கல்லூரித் தமிழாய்வுத் துறைத் தலைவா் ஜெஸின் பிரான்சிஸ் வாழ்த்துரை வழங்கினாா். தஞ்சாவூா் மன்னா் சரபோஜி அரசுக் கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியா் மதுரை சந்திரன் சிறப்புரையாற்றினாா்.

தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை நிறைவு விழா நடைபெற்றது. இணையவழிக் கருத்தரங்கில் புனிதசிலுவை தன்னாட்சிக் கல்லூரிப் பேராசிரியா்கள் மற்றும் மாணவிகள்,

பிற கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுநிலையினா்

பங்கேற்று கவிபாடினா். ஏற்பாடுகளை ஜெஸிந்தாராணி, பிரேமா, தேவதா, சுஜாதா ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைக்கவில்லை: மம்தா விளக்கம்

2 கட்டத் தேர்தலில் சதமடித்த பாஜக: அமித் ஷா

இந்த வாரம் கலாரசிகன் - 28-04-2024

அளியரோ அளியர் அளி இழந்தோரே!

யாரோ பிரிகிற்பவரே?

SCROLL FOR NEXT