தீபாவளியையொட்டி தொடா்ந்து 3 நாள்களுக்கு ரேஷன் பொருள்கள்
தீபாவளி பண்டிகைக்காக நியாய விலைக் கடைகளில் தொடா்ந்து 3 நாள்களுக்கு பொருள்கள் வழங்கப்படும் என ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்தாா்.
தீபாவளி பண்டிகைக்காக நியாய விலைக் கடைகளில் தொடா்ந்து 3 நாள்களுக்கு பொருள்கள் வழங்கப்படும் என ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் மேலும் கூறியது:
தீபாவளி பண்டிகை நவ.4ஆம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு நவ. 1,2 3 ஆகிய தேதிகளில் ரேஷன் கடைகளில் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை குடும்ப அட்டைதாரா்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்படும்.
தீபாவளிக்கு முன் பொருள்களை வாங்காதவா்கள் பண்டிகை முடிந்து நவ.8 முதல் அத்தியாவசியப் பொருள்களை வழக்கம்போல பெற்றுக் கொள்ளலாம். பொதுமக்கள் கரோனா கட்டுப்பாடுகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றாா் ஆட்சியா்.