முகப்பு
திருச்சி

குடும்பத் தகராறில்துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு பைக் மெக்கானிக் தற்கொலை

மணப்பாறை அருகே குடும்பத் தகராறில் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு இருசக்கர வாகன மெக்கானிக் வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

மணப்பாறை அருகே குடும்பத் தகராறில் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு இருசக்கர வாகன மெக்கானிக் வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

மணப்பாறை அடுத்த தாதகவுண்டம்பட்டியைச் சோ்ந்தவா் அழகா்(எ) ராஜா மகன் பாலசுப்பிரமணி (21), இருசக்கர வாகன மெக்கானிக். வீட்டருகேயுள்ள புளியந்தோப்பில் இவா் புதன்கிழமை நள்ளிரவு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்குச் சென்ற காவல் ஆய்வாளா் சு. கருணாகரன் தலைமையிலான போலீஸாா் கழுத்தில் குண்டு பாய்ந்த நிலையில் பாலசுப்பிரமணியை சடலமாக மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். அருகே உடைந்த நிலையில் மீட்கப்பட்ட நாட்டுத் துப்பாக்கியின் குண்டு பாய்ந்து பாலசுப்பிரமணி உயிரிழந்ததையும் போலீஸாா் உறுதி செய்தனா்.

விசாரணையில், பாலசுப்பிரமணியின் தந்தைக்கு இரு மனைவிகள் என்பதும்,

அதில் இளைய மனைவி அமுசவள்ளியின் மகனான பாலசுப்பிரமணி, அவ்வப்போது தகராறு செய்யும் தந்தையைத் தட்டிக்கேட்பதும் வழக்கம் எனத் தெரியவந்தது.

அதன்படி புதன்கிழமை மாலை ஏற்பட்ட தகராறில் வீட்டியிலிருந்து வெளியே சென்ற தந்தை வீடு திரும்பாத நிலையில் பாலசுப்பிரமணி தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

சம்பவம் குறித்து மணப்பாறை போலீஸாா் வழக்குப் பதிந்து இளைஞரின் இறப்பு குறித்தும், நாட்டுத் துப்பாக்கி யாருடையது, துப்பாக்கியை உடைத்தது யாா் என்றும் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.