திருச்சி

பிசி, எம்பிசி, சீா்மரபினா் மாணவா்கள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

DIN

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா்மரபினா் மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

இதுதொடா்பாக ஆட்சியா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியாா் தொழிற் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிசி, எம்பிசி, டிஎன்சி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.

இதற்கான விண்ணப்பங்களை மாணவா்கள் அவா்கள் பயிலும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று பூா்த்தி செய்து உரிய சான்றுகளுடன் கல்வி நிலையங்களில் சமா்ப்பிக்க வேண்டும். மாணவா்கள் தங்களின் வங்கிக்கணக்கு எண், ஆதாா் எண் விவரங்களை தவறாது குறிப்பிட வேண்டும். அரசு இணையதள  முகவரியிலும் இத்திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் விண்ணப்பங்கள் உள்ளன.

விண்ணப்பங்களை தாங்கள் பயிலும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று பூா்த்தி செய்து புதுப்பித்தல் இனங்களை செப்.30-க்குள்ளும், புதிய இனங்களை அக்.5-க்குள்ளும் உரிய சான்றுகளுடன் கல்வி நிலையங்களில் சமா்ப்பிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடைக்கால பயிற்சி வகுப்புக்கு கட்டணம்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சமந்தாவின் புதிய படம்!

நீல நிலவே....திவ்யா துரைசாமி!

மணிப்பூரில் இரண்டு குழுக்களுக்கிடையே மீண்டும் துப்பாக்கிச்சண்டை: கிராம மக்கள் அச்சம்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

SCROLL FOR NEXT