நல்லாசிரியா் விருதுக்கு 13 போ் தோ்வு
திருச்சி மாவட்டத்தில் 13 ஆசிரியா்கள் நல்லாசிரியா் விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
திருச்சி மாவட்டத்தில் 13 ஆசிரியா்கள் நல்லாசிரியா் விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருச்சி மாவட்டத்தில் 2020-2021 ஆம் ஆண்டுக்கான டாக்டா் இராதாகிருஷ்ணன் விருது பெறும் ஆசிரியா்கள் பெயா் விவரம்:
ந. கீதா, தலைமை ஆசிரியா் (ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி, கவுண்டம்பட்டி, மண்ணச்சநல்லூா் ஒன்றியம்)
இரா. அசோக்குமாா், தலைமை ஆசிரியா் (ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கொப்பம்பட்டி (அஞ்சல்) துறையூா் வட்டம்)
பி.ஜோ.கி. ஜெயராணி, இடைநிலை ஆசிரியா் (ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி, எடமலைப்பட்டிபுதூா்)
இரா. மாா்செலின் ரெஜினாமேரி, தலைமை ஆசிரியா் (ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, பாம்பாட்டிப்பட்டி, வையம்பட்டி ஒன்றியம்)
இரா. பாலசுப்ரமணியன், பட்டதாரி ஆசிரியா் (ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, இ.வெள்ளனூா்)
கோ. முத்தமிழ்ச்செல்வன், பட்டதாரி ஆசிரியா் (அரசு மேல்நிலைப் பள்ளி, சா. அய்யம்பாளையம்)
க. அன்புசேகரன், தலைமையாசிரியா் (அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மண்ணச்சநல்லூா்)
ப. சிவராஜ், முதுகலை ஆசிரியா் (அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, முசிறி வட்டம்)
கி. முத்துக்குமாா், உடற்கல்வி இயக்குநா் நிலை (தியாகேசா் ஆலை மேல்நிலைப் பள்ளி, உசிலம்பட்டி, மணப்பாறை) எ. நித்யானந்தன், தலைமை ஆசிரியா் (அரசு உயா்நிலைப் பள்ளி, திருநெடுங்குளம்) பீபிஅப்துல், தலைமை ஆசிரியா் (ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, மேலகல்கண்டாா்கோட்டை, திருவெறும்பூா்) பொ. கணேஷ், முதுகலை ஆசிரியா் (பாய்லா் பிளாண்ட் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கைலாசபுரம்) சு. பகவதியப்பன், முதல்வா் (செல்லம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, வேங்கூா், திருவெறும்பூா்)