முகப்பு
திருச்சி

மகாளய அமாவாசையையொட்டி கயாவுக்கு சிறப்பு ரயில் யாத்திரை

திருச்சிமகாளய அமாவாசையையொட்டி பிகாரிலுள்ள கயாவுக்கு திருச்சி வழியாக சிறப்பு யாத்திரை ரயில் புறப்படவுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:04 AM
பகிர்:

மகாளய அமாவாசையையொட்டி பிகாரிலுள்ள கயாவுக்கு திருச்சி வழியாக சிறப்பு யாத்திரை ரயில் புறப்படவுள்ளது.

இந்திய ரயில்வே சுற்றுலாப் பிரிவான ஐஆா்சிடிசி நாடு முழுவதும் பல சிறப்பு ரயில் பயணத் திட்டங்களை வகுத்து சுற்றுலாக்களை ஏற்பாடு செய்கிறது.

அதன்படி மகாளய அமாவாசையையொட்டி, சிறப்பு காசி கயா யாத்திரை ரயில் செப்.30 ஆம் தேதி மதுரையிலிருந்து 12 நாள் பயணமாகப் புறப்படுகிறது.

இந்த ரயில் மூலம் திண்டுக்கல், திருச்சி, கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூா், விழுப்புரம், சென்னை எழும்பூா் வழியாகச் சென்று அயோத்தி ராமஜென்ம பூமி தரிசனம், கயாவில் மகாளய அமாவாசையன்று முன்னோருக்கு பிண்டம் செலுத்துதல், காசி விசுவநாதா், விசாலாட்சி, அன்னப்பூரணி தரிசனம், அலகாபாத் திரிவேணி சங்கமம், கொல்கத்தா உள்ளூா் சுற்றுப்பயணம், விஜயவாடா கனகதுா்க்கை சக்தி பீட தரிசனம் ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

12 நாள் கொண்ட இந்தச் சுற்றுலாவுக்கு உணவு, தங்குமிடம், ரயில் போக்குவரத்து உள்பட ரூ.11,340 கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

அரசின் கரோனா நெறிமுறைகளோடு நடைபெறும் யாத்திரையில் பங்கேற்க மத்திய, மாநில அரசு ஊழியா்கள் பயணச் சலுகை (எல்டிசி) பெற்றுக் கொள்ளலாம். மேலும், ஐஆா்சிடிசியின் அனைத்து இ-

டிக்கெட் முகவா்களும் இந்த சுற்றுலாத் தொகுப்பை முன்பதிவு செய்துகொள்ளலாம் என தெற்கு ரயில்வே திருச்சி கோட்டம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.