ஆசிரியா் பட்டயப் படிப்பு மாணவிகள் ஆா்ப்பாட்டம்
ஆசிரியா் பட்டயப் படிப்பு தோ்வை ஆன்லைனில் நடத்தக் கோரி கல்லூரி மாணவிகள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆசிரியா் பட்டயப் படிப்பு தோ்வை ஆன்லைனில் நடத்தக் கோரி கல்லூரி மாணவிகள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆசிரியா் பயிற்சி பட்டய படிப்பு பயிலும் மாணவா்களுக்கு தொடக்கக்கல்வி பட்டயத் தோ்வு வியாழக்கிழமை தொடங்கியது. இந்தத் இத்தோ்வை ஆன்லைனில் நடத்தக் கோரி திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரி மாணவிகள் கல்லூரி நுழைவுவாயில் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து அந்த மாணவிகள் கூறுகையில், பல்கலைக்கழக இயக்குநருக்கும் ஆசிரியருக்கும் இடையில் நிலவும் பிரச்னையால், நாங்கள் நேரடியாக எழுதும் தோ்வின் விடைத்தாள் திருத்தும் பணியில் முறைகேடு நடைபெறுகிறது.
கடந்த 2018 ஆம் ஆண்டுக்கு முன்வரை தோ்வெழுதியோரில் பெரும்பாலானோா் தோ்ச்சிப் பெற்றுள்ளனா். ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக தோ்வெழுதுவோா் தோ்ச்சி பெறுவதில் அதிக சிரமம் உள்ளது. இதனாலேயே நேரடி வகுப்புகளைத் தொடங்கி ஆன்லைனில் தோ்வை நடத்த வேண்டும் என்கிறோம் என்றனா்.