நல்லாசிரியர் விருது பெறுவோர். 
திருச்சி

விராலிமலை: நல்லாசிரியர் விருது பெறுவோர்

விராலிமலையில் 4 ஆசிரியர்கள் மாநில அரசின் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

DIN

விராலிமலையில் 4 ஆசிரியர்கள் மாநில அரசின் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

குடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5ம் தேதி பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் ஆசிரியர் தின விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் அந்த விழாவில் தொடக்க, நடுநிலை, உயர்நிலை,மேல்நிலை பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருதான டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. 

இந்த விருதுடன் ரூபாய் 10,000 மற்றும் வெள்ளிப் பதக்கம் வழங்கி கவுரவிக்கபடுகிறது. அந்த வகையில் நிகழ் கல்வி ஆண்டுக்கான சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்ய மாவட்ட, மாநில அளவிலான குழுக்களை பள்ளிக்கல்வித்துறை அண்மையில் நியமித்தது. 

இதையடுத்து தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 171 ஆசிரியர்கள், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 171 ஆசிரியர்கள், மெட்ரிக் பள்ளியில் 37 பேர், ஆங்கில இந்திய பள்ளி ஆசிரியர்கள் 2 பேர், சமூக பாதுகாப்பு துறை பள்ளி ஆசிரியர்கள் 2 பேர், மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் 2 பேர் என மொத்தம் 385 ஆசிரியர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு பெற்றுள்ளனர்.

இவற்றில் 5 ஆசிரியர்களுக்கு மட்டும் சென்னையில் வெள்ளிக்கிழமை (இன்று மாலை)நடைபெற உள்ள விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் விருதுகளை வழங்குகிறார். எஞ்சிய ஆசிரியர்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்குபெற்று விழா நடத்தி அவர்களுக்கு வரும் நாட்களில் விருதுகள் வழங்க உள்ளனர்.

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 11 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகி உள்ளனர். இதில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் 5 பேர், தொடக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் 5 பேர், மெட்ரிக் பள்ளி ஆசிரியர் ஒருவர் என மொத்தம் 11 பேர் தேர்வாகியுள்ளனர். இதில் குறிப்பாக விராலிமலை சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட இலுப்பூர் கல்வி மாவட்டத்தில் 4 ஆசிரியர்கள் தேர்வாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விருது பெறும் கவரப்பட்டி தொடக்கப்பள்ளி ஆசிரியை மீனா ராமநாதன் மற்றும் லெக்கணாபட்டி உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஆண்டனி, மேலூர் தொடக்கப்பள்ளி ஆசிரியை அ.கிறிஸ்டி, மாங்குடி மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் தா.ராமர் ஆகியோர் இலுப்பூர் கல்வி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது/

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெண் மேகமே... கரிஷ்மா டன்னா!

பிக்-பாஸ் தொடரில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விலகல்!

பிகாரில் ஆட்சிக்கு வந்தால் பொங்கல்தோறும் மகளிருக்கு ரூ.30,000: தேஜஸ்வி

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியது! | SIR | EC

இரண்டு ஆண்டுகளில் 42% மதிப்பிழக்கும் மின்சார வாகனங்கள்! காரணம் என்ன?

SCROLL FOR NEXT