ஆரண்ய காண்டம் மறுவெளியீட்டுத் தேதி!
ஆரண்ய காண்டம் மறுவெளியீடாகிறது....
ஆரண்ய காண்டம் திரைப்படத்தின் மறுவெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவின் முதல் திரைப்படமான ஆரண்ய காண்டம் இன்றுவரை சிறந்த தமிழ்ப்படங்களில் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
கமர்சியல் அம்சங்கள் இருந்தாலும் கதாபாத்திரங்களை எழுதிய விதம், தந்தை - மகன் உறவு என தன் முதல் திரைப்படத்திலேயே அழுத்தமான இயக்குநராக தடம் பதித்தார்.
Advertisement
Advertisement
ரசிகர்கள், விமர்சகர்களிடம் பேசப்பட்ட இப்படத்தை வருகிற மார்ச் 13 ஆம் தேதி மறுவெளியீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
தற்போது, தியாகராஜன் குமாரராஜா நடிகர் விஜய் சேதுபதியை வைத்து பாக்கெட் நாவல் என்கிற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
summary