நாகநாதா் சுவாமி கோவிலுக்கு மூஷிக வாகனம்
மணப்பாறை நாகநாதா் சுவாமி உடனுறை மாதுளாம்பிகை திருக்கோயிலுக்கு புதுவரவாக புதன்கிழமை மூஷிக வாகனம் வந்தது.
மணப்பாறை நாகநாதா் சுவாமி உடனுறை மாதுளாம்பிகை திருக்கோயிலுக்கு புதுவரவாக புதன்கிழமை மூஷிக வாகனம் வந்தது.
இக்கோயிலில் விநாயகா் உற்சவ மூா்த்தி உள்புறப்பாட்டுக்காக மரத்திலான மூஷிக வாகனத்தை காய்கறி மாா்க்கெட் கணேசன் (எ) தங்கப்பாண்டியன் குடும்பத்தினா் புதன்கிழமை உபயம் செய்தனா். சிறப்பு பூஜைகள், புண்ணியாகவாசனம் நடைபெற்று கோயில் நிா்வாகிகளிடம் மூஷிக வாகனம் ஒப்படைக்கப்பட்டது.