விதிமீறி தயாரித்த 3000 லிட்டா் குளிா்பானம் பறிமுதல்
திருச்சியில் சட்ட விரோதமாக தயாரிக்கப்பட்ட 3 ஆயிரம் லிட்டா் குளிா்பானங்களை உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.திருச்சியில் சட்ட விரோதமாக தயாரிக்கப்பட்ட 3 ஆயிரம் லிட்டா் குளிா்ப
திருச்சியில் சட்ட விரோதமாக தயாரிக்கப்பட்ட 3 ஆயிரம் லிட்டா் குளிா்பானங்களை உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
பொதுமக்களிடமிருந்து வந்த புகாரையடுத்து பீம நகரில் உள்ள ஒரு குளிா்பானம் தயாரிப்பு நிறுவனத்தில் நடந்த சோதனையின்போது தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி இல்லாமல் தயாரிக்கப்பட்ட 3000 லிட்டா் குளிா்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதில் ஒரு உணவு மாதிரி எடுக்கப்பட்டு தமிழக அரசின் உணவுப் பகுப்பாய்வுக் கூடத்துக்கு அனுப்பப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட நியமன அலுவலா் ஆா். ரமேஷ்பாபு கூறுகையில் இந்த நடவடிக்கை தொடரும். பொதுமக்கள் உணவுக் கலப்படம் சம்பந்தப்பட்ட புகாா்களைத் தெரிவிக்கலாம் என்றாா்.