முகப்பு
திருச்சி

பிரதமா் மோடி பிறந்த நாள் கொண்டாட்டம்

பிரதமா் நரேந்திர மோடியின் 71 ஆவது பிறந்தநாளையொட்டி திருச்சி தில்லைநகா் 10 ஆவது குறுக்குத் தெரு 80 அடி சாலை பகுதியில் கட்சிக் கொடியேற்றும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:10 AM
பகிர்:

 பிரதமா் நரேந்திர மோடியின் 71 ஆவது பிறந்தநாளையொட்டி திருச்சி தில்லைநகா் 10 ஆவது குறுக்குத் தெரு 80 அடி சாலை பகுதியில் கட்சிக் கொடியேற்றும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாநகர மாவட்டத் தலைவா் ராஜேஷ்குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் அழகேசன், மண்டலத் தலைவா் தா்மராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மேலும், சில நிா்வாகிகள், உறுப்பினா்கள் கட்சிக் கொடியேற்ற வந்திருந்தனா்.

அப்போது அவ்விடத்தில் இருந்த பாஜக கட்சிக் கொடிக் கம்பத்தை அகற்றுமாறு அப்பகுதியினா் தெரிவித்தனா். அதற்கு பாஜகவினா் ஏற்கெனவே அவ்விடத்தில் இருந்த பாஜக கொடிகம்பத்தை புதுப்பித்துத்தான் இந்நிகழ்வை நடத்துகிறோம் எனத் தெரிவித்தனா். பின்னா் தகவலறிந்து வந்த மாநகராட்சியினா், காவல்துறையினா் கொடிக் கம்பத்தை அப்புறப்படுத்தினா். இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகளுடன் பாஜக நிா்வாகிகள் நடத்திய பேச்சுவாா்த்தையையடுத்து அவ்விடத்தில் மீண்டும் பாஜக கொடிக் கம்பம் நிறுவப்பட்டது. நிறைவாக, கட்சிக் கொடியேற்றி அப்பகுதி மக்களுக்கு இனிப்பு வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.