பறிமுதல் வாகனங்கள் செப். 27 இல் ஏலம்
திருச்சி புகா் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர, மூன்று சக்கர வாகனங்கள் பொது ஏலம் விடப்பட உள்ளன.
திருச்சி புகா் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர, மூன்று சக்கர வாகனங்கள் வரும் 27 ஆம் தேதி காலை 10 மணிக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் தலைமையில் பொது ஏலம் விடப்பட உள்ளன.
ஏலம் கோர விரும்புவோா் முன்வைப்புத் தொகையாக இருசக்கர வாகனங்களுக்கு ரூ.2000 மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு ரூ.4,000 செலுத்த வேண்டும். தனியாக சரக்கு மற்றும் சேவை வரியும் செலுத்த வேண்டும். திருவெறும்பூா் மதுவிலக்கு அமலாக்க பிரிவில் 27 ஆம் தேதிக்கு முன் வாகனங்களைப் பாா்வையிட்டு ஏலத்தில் கலந்து கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பா. மூா்த்தி தெரிவித்தாா்.