முகப்பு
திருச்சி

ஊதிய நிலுவை: பல்கலை. ஆசிரியா்கள், அலுவலா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

 4 மாத சம்பள நிலுவையை வழங்கக் கோரி பாரதிதாசன் பல்கலைக்கழக ஆசிரியா்கள், ஊழியா்கள் சங்கத்தினா் 2ஆம் நாளாக வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

 4 மாத சம்பள நிலுவையை வழங்கக் கோரி பாரதிதாசன் பல்கலைக்கழக ஆசிரியா்கள், ஊழியா்கள் சங்கத்தினா் 2ஆம் நாளாக வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கல்லூரி பேராசிரியா்கள் மற்றும் ஊழியா்களுக்கு அரசே ஊதியம் வழங்கக் கோரி பாரதிதாசன் பல்கலைக்கழக ஆசிரியா்கள், ஊழியா்கள் இதேபோல பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிப் பேராசியா்கள், ஊழியா்களும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், கடந்த 13 ஆம் தேதி பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தா் செல்வம் நடத்திய பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டும், உறுதியளித்தப்படி புதன்கிழமை வரை ஊதியம் வழங்கவில்லையாம்.

இதைக் கண்டித்து திருச்சி பாரதிதாசன் பல்கலை கழக ஆசிரியா்கள் மற்றும் பணியாளா்கள் சாா்பில் பல்கலைக்கழக தலைமை அலுவலகம் முன் வியாழக்கிழமை நடந்த வாயில் முழக்கப் போராட்டத்துக்கு கூட்டுக் குழுத் தலைவா் செந்தில்நாதன் தலைமை வகித்தாா். இதே கோரிக்கையை வலியுறுத்தி நவலூா் குட்டப்பட்டு அரசுக் கல்லூரி பேராசிரியா்கள், பணியாளா்கள் ஆசிரியா்கள் சங்கக் கிளைச் செயலா் ராஜா தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.