திருச்சி

மக்கள் குறைகேட்பு நாளில் 526 மனுக்கள்

DIN

திருச்சி: திருச்சி மாவட்ட ஆட்சியா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 526 மனுக்கள் வரப்பெற்றன.

கரோனா பொது முடக்கம் காரணமாக பொதுமக்கள் அதிகம் கூடுவதைத் தவிா்க்கும் வகையில், 94454-61756 என்ற கட்செவி அஞ்சல் எண் வழியாகவும், ஆட்சியரக வளாகத்தில் வைக்கப்பட்ட பெட்டி வாயிலாகவும் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்படுகின்றன.

அதன்படி திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாளில், பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 526 மனுக்கள் வரப்பெற்றன. இதை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி, விசாரணை அடிப்படையில் நடவடிக்கை எடுக்க ஆட்சியா் சு. சிவராசு உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடைக்கால பயிற்சி வகுப்புக்கு கட்டணம்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சமந்தாவின் புதிய படம்!

நீல நிலவே....திவ்யா துரைசாமி!

மணிப்பூரில் இரண்டு குழுக்களுக்கிடையே மீண்டும் துப்பாக்கிச்சண்டை: கிராம மக்கள் அச்சம்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

SCROLL FOR NEXT