காவலா்களுக்கான குறைதீா் கூட்டம்
திருச்சி மாவட்டக் காவலா்களுக்கான குறைதீா் கூட்டம் சுப்ரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருச்சி மாவட்டக் காவலா்களுக்கான குறைதீா் கூட்டம் சுப்ரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பா. மூா்த்தி கலந்து கொண்டு, காவலா்களின் குறை கேட்டு மனுக்களை பெற்றுக்கொண்டாா். கூட்டத்தில் 50 பெண் காவலா்கள் உள்பட 140 காவலா்கள் பணியிட மாற்றம், ஊதியக் குறைபாடு, தண்டனைக் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மனுக்களாக வழங்கினா். இதேபோல மாநகர காவல்துறையில் ஆணையா் ஜி. காா்த்திகேயன் தலைமையில் போலீஸாருக்கான குறைதீா் முகாம் நடைபெற்றது.