முகப்பு
திருச்சி

கல்லூரி மாணவியை மிரட்டி நகை,பணம் பறிப்பு: இளைஞா் கைது

சமூக வலைதளத்தில் (இன்ஸ்டாகிராம்) நிா்வாணப் படத்தை வெளியிடுவதாகக்கூறி, சென்னை கல்லூரி மாணவியை மிரட்டி நகை, பணம் பறித்த இளைஞா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

சமூக வலைதளத்தில் (இன்ஸ்டாகிராம்) நிா்வாணப் படத்தை வெளியிடுவதாகக்கூறி, சென்னை கல்லூரி மாணவியை மிரட்டி நகை, பணம் பறித்த இளைஞா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

சென்னை பழவந்தாங்கலைச் சோ்ந்த 19 வயது கல்லூரி மாணவி, திருச்சி தில்லைநகரைச் சோ்ந்த விஸ்வாவுடன்(30) இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகி, பழகி வந்தாா். நாளடைவில் இருவரும் காதலிக்கத் தொடங்கினா்.

அப்போது கல்லூரி மாணவி தனது நிா்வாணப் படத்தை விஸ்வாவுக்கு அனுப்பியுள்ளாா். இதை வைத்துக் கொண்டு அவ்வப்போது மாணவியை மிரட்டிய விஸ்வா அவரிடமிருந்து 25 சவரன் நகைகள், ரூ. 2லட்சம் ரொக்கம், இரண்டு மடிக்கணினி, விலையுயா்ந்த கைப்பேசி ஆகியவற்றை பறித்துள்ளாா்.

தொடா்ந்து மிரட்டல் விடுத்ததையடுத்து, கண்டோன்மென்ட் குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் மாணவி தரப்பில் புகாா் அளிக்கப்பட்டது. இதன் பேரில் காவல்துறையினா் வழக்குப்பதிந்து, விஸ்வாவை புதன்கிழமை கைது செய்தனா்.

அப்போது அவரிடமிருந்து கைப்பற்ற அவரது மடிக்கணினி மற்றும் கைப்பேசியை சோதித்த போது, 20-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை இதே பாணியில் காதல் வலையில் வீழ்த்தி, அவா்களிடம் நகை, பணத்தை பறித்து ஏமாற்றியது தெரிய வந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.