திருச்சி

மணப்பாறை கே.உடையாப்பட்டியில் ஜல்லிக்கட்டு: 650 காளைகள் பங்கேற்பு

மணப்பாறை அடுத்த கே.உடையாப்பட்டியில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தூய பனி மாதா பேராலயத்திடலில் ஜல்லிக்கட்டு நடைபெற்று

DIN

மணப்பாறை: மணப்பாறை அடுத்த கே.உடையாப்பட்டியில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தூய பனி மாதா பேராலயத்திடலில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது, போட்டியில் 650-க்கும் மேற்பட்ட காளைகளும், 350-க்கும் மேற்பட்ட காளையர்களும் களம் காணும் போட்டியினை வருவாய் வட்டாட்சியர் எஸ்.கீதாராணி துவக்கி வைத்துள்ளார். 

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கே.உடையாப்பட்டியில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தூய பனி மாதா பேராலயத்திடலில் ஜல்லிக்கட்டு தற்போது நடைபெற்று வருகிறது. ஆலய வழிபாட்டினைத் தொடர்ந்து, வாடிவாசல் வழியாக ஊர் காளைகள் அவிழ்க்கப்பட்டதையடுத்து திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்திருக்கும் 650-க்கும் மேற்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்க்கப்பட்டு வருகிறது. 

காளைகளை திமில் பிடித்து தழுவ 350 காளையர்கள் 50, 50 தொகுப்பாக களம் காணுகின்றனர். போட்டியினை ஜல்லிக்கட்டு உறுதிமொழிக்கு பின் வருவாய் வட்டாட்சியர் எஸ்.கீதாராணி துவக்கி வைத்துள்ளனர். 

வாடிவாசல் வழியே சீறிபாய்ந்த காளைகள், காளையர்களை கலங்கடித்த நிலையில் களத்தில் நின்று விளையாடியது. சில காளைகள், காளையர்கள் தொட்டு கூட பார்க்க முடியாதபடி சீறிபாய்ந்தது. 

இருப்பினும் சில காளைகளை வீரர்கள் திமில் பிடித்து தழுவினர். காளைகளை பிடித்த வீரர்களுக்கு ரொக்கப் பணம், வெள்ளிக்காசு, கட்டில், சைக்கிள், சில்வர் பாத்திரங்கள், பிளாஸ்டிக் பொருள்கள் உள்ளிட்டவை வெற்றி பெற்ற காளைகளுக்கும், வீரர்களுக்கும் பரிசுகளாக வழங்கப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு பணிக்காக காவல்துறையினர்  ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

இலங்கை அருகே உருவாகும் மற்றொரு புயல்! வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும்!

தேசிய பால் நாள்: விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர்!

SCROLL FOR NEXT