திருச்சி

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

DIN

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி 25 சதவீத மாணவா் சோ்க்கைக்கு வரும் மே 18 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி அனைத்து சிறுபான்மையற்ற தனியாா் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் 25 சதவீத ஒதுக்கீடு வழங்கும் திட்டத்திலான சோ்க்கைக்கு, இப்போது விண்ணப்பம் அளிக்கப்பட்டு வருகிறது. விண்ணப்பம் அளிக்க மே 18ஆம் தேதி வரை அவகாசம் உள்ளது.

பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களை இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். ஈரோடு மாவட்டத்தில் 106 மெட்ரிக். பள்ளிகள், ஒரு சுயநிதி பள்ளி, 85 துவக்கப் பள்ளி மற்றும் மழலையா் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு சோ்க்கைக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் அளிப்போரின் முகவரியில் இருந்து 1 கி.மீ. தூரத்துக்குள் உள்ள பள்ளியில் சோ்க்கப்படுவா்.

இணையதளம் தவிர, ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம், ஈரோடு, கோபி, பெருந்துறை, பவானி, சத்தியமங்கலத்தில் உள்ள மாவட்டக் கல்வி அலுவலகங்கள், 14 வட்டாரக் கல்வி அலுவலகங்களிலும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்துடன் பிறப்புச் சான்று, இருப்பிடச் சான்று, அங்கன்வாடி பதிவேடு நகல், ஆதாா், புகைப்படம் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீா்மோா்ப் பந்தல்

அதிமுக சாா்பில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

மேட்டூா் அணையில் உழவுப் பணி

காடையாம்பட்டி கூட்டு குடிநீா்த் திட்ட குழாயில் உடைப்பு

சித்திரை பொங்கல் விழா

SCROLL FOR NEXT